புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசிய நாடுகளில் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில்தமிழ்நாடு முதலமைச்சர்உத்தரவின்படிபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கோவிட் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள், மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கொரோனாபாதிப்பு அதிகம் தென்படும் நாடுகளில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கோவிட் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும், பரிசோதனைகள் முடிவுக்கு வரும் வரை அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அதிகாரிகளுக்குஅறிவுறுத்தினார்.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கோவிட் தொற்று சிகிச்சை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேவையான இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிடவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கவும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்திடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமுஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனாதொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் சமூக இடைவெளியிணை பின்பற்றவும், கைகளை சோப்பு போட்டு கழுவவும், முக கவசம் அணிவதன், மூலம் கோவிட் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona safety, CoronaVirus, District collectors, Local News, Pudukkottai