முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு..

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு..

X
பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

Pudukottai News | புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 190 தேர்வு மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுத்தேர்வு மையமான புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு 10,555 மாணவிகள் 9,737 மாணவர்கள் என மொத்தம் 20,292 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 190 தேர்வு மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது.

இத்தேர்வு பணியில் பறக்கும் படையினர், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 2,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி ,தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pudukkottai