முகப்பு /புதுக்கோட்டை /

புதுகையில் உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்..

புதுகையில் உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்..

X
சேறு

சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்

Pudukkottai News | புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் உடல் முழுவதும் சேற்றை பூசி கொண்டு நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். 

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் மற்றும் நாடு செலுத்துதல் எனும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடத்தப்படும். இதில் பொன்னமராவதி, ஆலவயல் ,செவலூர்,செம்பூதி ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பங்குனி பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ராட்சத ஈட்டி ,கம்பு, உள்ளிட்ட பொருட்களுடன் பக்தர்கள் உடலில் முழுவதும் சேறு சகதி பூசி கொண்டு கோலாட்டம் அடித்து நூதன முறையில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாரை சாரையாக வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து, அங்குள்ள குளத்தில் புனித நீராடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்விழாவில் தஞ்சாவூர் ,திருச்சி மதுரை ,சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முத்து மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Local News, Pudukkottai