பெண்களைப் போற்றும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண் சாதனையாளர்களை கௌரவப்படுத்தி பெருமை கொள்கிறது நியூஸ் 18 செய்தித்தளம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற கவிதா ராமு அவர்கள் தான் செல்லும் பாதையில் சிங்கநடை போட்டு அநீதிக்கு எதிராக சீறிய சமீபத்திய காட்சிகள் தான் வேங்கை வயலில் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சுழற்றப்பட்ட சாட்டை. பாதிக்கப்பட்டவர்களின் தாயாக மாறிய ஆட்சியரை புகழாதவர்கள் இல்லை. இந்த சிங்கப்பெண் குறித்த ஒரு செய்தித்தொகுப்பு.
இயற்கையின் காதலி, பல கலைகளின் வாணி; மாற்றுத்திறனாளிகள் உற்ற தோழ, விவசாயிகளின் அன்பு தங்கை, தாடி இல்லாத பெரியார், வார்த்தைகள் இன்றி வாழ்க்கையில் பெண்ணியம் பேசுபவள், 2 k கிட்ஸ் சேட்டைகளை கண்டிக்கும் செல்ல ஆசிரியர், அப்பப்பா எத்தனை பொறுப்புகள் அனைத்தையும் அழகாகவும் கம்பீரமாகவும் சுமக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
அழகிய கோயில் நகரமான மதுரையில் ராமு மணிமேகலை தம்பதியருக்கு மகளாக பிறந்தார் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். இவரது தந்தை ராமு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தந்தை மாவட்ட ஆட்சியராக இருந்ததனால், தந்தையின் இடமாற்றத்தால் பத்து வெவ்வேறு பள்ளிகளில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.
தன்னுடைய ஐந்தாவது வயதில் இருந்தே பரதநாட்டிய கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கவிதா ராமு முறையாக நடனம் பயின்று பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். பொருளாதாரப் பேராசிரியராக பணி செய்து வந்த நிலையில் தனது தந்தையின் விருப்பத்திற்கிணங்க இந்திய குடியியல் பணி தேர்வை எழுதி இந்திய அளவில் 6 வது ரேங்க் பெற்று தேர்வானார். வேலூர் மாவட்டத்தில் பணியில் இணைந்தார்.சீன அதிபர் மாமல்லபுரம் வருகையையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவுக்கு தலைமை பொறுப்பை ஏற்றார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் . பின்னர் கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு இவரை பிரதமர் மற்றும் சீன அதிபர் பாராட்டினர்.
அதன் பின்னர் பெண் உரிமை போராளியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆட்சியராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக ஆட்சியர் அலுவலக பெண் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தந்தார். ”ஆட்சியர் எங்கள் தேவை அறிந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் ஆட்சியரகத்தில் பணி செய்யும் பெண் அலுவலர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆட்சியரிடம் மழையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும்படி 2 கே கிட்ஸ் இன்ஸ்டாவில் சேட்டைகள் செய்ய அதனை ரசித்த ஆட்சியர் அதை புகைப்படம் எடுத்து அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு பட்டிதொட்டியெங்கும் வைரலாகியது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வுக்காக ஆட்சியர் கவிதா ராமு உத்தரவின் பேரில் வாள்வீச்சு கலைஞர்கள் கொண்டு நடனம் மூலம் சதுரங்க ஆட்டம் குறித்த விழிப்புணர்வு பாடல் தமிழக முதல்வரால் பாராட்டப்பட்டு முதல்வரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஷார் செய்யப்பட்டது.
மேலும் சமீபத்தில் வேங்கை வயல் கிராம விவகாரத்தில் உடனடியாக சாதி வேறுபாடுகள், தீண்டாமை, இரட்டை குவளை முறை, ஆகியவற்றை எதிர்த்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு கிராமத்தில் வசித்து வந்த ஆதிதிராவிட மக்களை ஊர் கோயிலுக்குள் அழைத்து சென்றது இவரின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆக மாறியது. பெரியாரின் கொள்கைகளை அணிகலன்களாக கொண்டு ”Break open ”என்று கூறி ஆலய நுழைவுப் பிரவேசத்தில் ஈடுபட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது.(பிரேக் ஓப்பன் என்ற வார்த்தை காண்பவர்களுக்கு புரிய வேண்டும்)மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்கும் கூட்டத்தில் ஒரு விவசாயியை அண்ணா என்று அழைத்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் அன்பு தங்கையாக மாறி விவசாயிகளை நெகிழ வைத்தார்.
பணி காரணமாக ஒரு இடத்தில் ஆய்வுக்கு சென்ற போது மழைத்தூரல் ஆட்சியர் மேல் விழ தொடங்க உடனே அவரின் உதவியாளர் குடை பிடிக்க அதை வேண்டாம் என தடுத்து மழை நல்லா இருக்கு என்று கூறிய தருணம் அவர் இயற்கையின் காதலி என்பதை நிரூபித்துள்ளது. ”அனைத்து துறை ஊழியர்களிடம் நண்பர் போல பழகுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமாக ஆட்சியர் திகழ்கிறார். தொண்டைமான் அரண்மனையில் மன்னர் ஆட்சி செய்வதை நான் பார்த்ததில்லை ஆனால் தற்போது நமது மாவட்ட ஆட்சியர் மகாராணி போல ஆட்சி செய்வது மிகவும் அருமையாக உள்ளது”. என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஆட்சியரகத்தில் வேலை செய்யும் ஊழியர்.
மாற்றுத்திறனாளிகள் மனு நாளின் போது மாற்றுத்திறனாளிகள் இருக்கைக்கே வந்து அவர்களிடம் மனு பெற்று சென்றார் ஆட்சியர். இதை கண்ட மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
சக மனிதர்களிடையே பழகும் போது ஆட்சியரின் எளிமை எங்களை வியப்படைய செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் தெரிவித்து ”மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்” என்று தனது அன்பை பாடல் வழியாக தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கையோ அலுவலர்கள் கோரிக்கையோ அனைத்தையும் ஆட்சியரை நேரடியாக சந்தித்து நாம் கூற முடியும் அதற்கு உடனே தீர்வு நமக்கு கிடைத்துவிடும். அனைத்து பணிகளையும் கூலாக ஹேண்டில் பண்ண கூடியவங்க என்று செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குக்கிராமத்தில் நடக்கும் விழா என்றாலும் தவறாமல், மறுக்காமல் கலந்து கொள்கிறார் மாவட்ட ஆட்சியர் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் நார்த்தாமலை ஊராட்சி மன்ற தலைவர் வேலு.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்டும் நீதி தேவதையாக மாவட்ட ஆட்சியரின் பணி தொடர மகளிர் தின வாழ்த்துக்கள் நாமும் அவருக்கு தெரிவித்தோம்.. மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாசு குறையாத ஆட்சியர் நீயென்று போற்றி புகழ வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: District collectors, Local News, Pudukkottai