Home /pudukkottai /

தந்தை பெரியார் விருது- புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தந்தை பெரியார் விருது- புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை ஆட்சியர்

புதுக்கோட்டை ஆட்சியர்

தந்தை பெரியார் விருதுக்கு தகுதியானவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

    சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிப்போர் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை குறிப்பிட வேண்டும். 2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி