Home /pudukkottai /

பொது மக்களுக்கு கட்டுரைப் போட்டி: ரூ.5000 முதல் பரிசு- ஆட்சியர் அறிவிப்பு

பொது மக்களுக்கு கட்டுரைப் போட்டி: ரூ.5000 முதல் பரிசு- ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை ஆட்சியர் பொதுமக்களுக்கு கட்டுரைப் போட்டி அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் அபாயங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து கிராமத்திலும் இன்று முதல் 30-ந் தேதி வரை பேரிடர் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடமிருந்து 15 - தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பான கட்டுரையின் 15-தலைப்புகள், கட்டுரையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை புதுக்கோட்டை மாவட்ட வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் மற்றும் அலுவலார்கள் தங்கள் கட்டுரைகளை வரும் 25-ந் தேதிக்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  மேற்படி கட்டுரைகளில் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி