முகப்பு /புதுக்கோட்டை /

 மே தினம்.. "இதை மட்டும் செய்ங்க" பெண் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை!

 மே தினம்.. "இதை மட்டும் செய்ங்க" பெண் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை!

X
தெருக்களில்

தெருக்களில் குப்பையை கண்டப்படி  வீச வேண்டாம்  தூய்மை பணியாளர் பெண்கள் கோரிக்கை

May day | தொழிலாளர் தினமான இன்று பொது இடங்களை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

  • Last Updated :
  • Pudukkottai, India

உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தொழிலாளர் தினமான இன்று, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் பொது இடங்களை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டி ஊராட்சியில் பத்து வருடங்களாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் மாரிக்கண்ணு,லதா ஆகியோர் நம்மிடம் தங்களது வேலையில் உள்ள எதார்த்தத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர்..

நாங்க பத்து வருஷமா இந்த வேலையில தான் இருக்கோம் காலையில் எழுந்த உடனே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்து அன்றைய தின வேலை செய்யக்கூடிய குக்கிராமத்திற்கு செல்வோம். அங்கு சென்று பொது இடங்களை சுத்தம் செய்த பின்னர், வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்கி வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வைப்போம். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய இடங்களில் கொசுக்கள் அண்டாமல் இருக்க ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பது, தொடர்ந்து தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்வது, கொசு மருந்து அடிப்பது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருவோம் என்றனர்.

ஒரு பெண்ணாக நாங்கள் இந்த வேலையை செய்வதனாலோ தூய்மை பணியாளர் தானே என்ற வேறுபாடுகளை மக்கள் எங்களிடையே காட்டியதில்லை ஒருவர் கிராமத்திற்கும் செல்லும்போதும் அனைத்து மக்களும் நன்றாகவே மதித்து பேசுவார்கள். மேலும் எங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மெடிக்கல் செக்கப் வசதி இருக்கும். மேலும் எங்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படும்.

நாங்கள் எங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது முதல் அடிப்படை தேவைகள் முழுவதும், இந்த வேலை செய்து தான் நடத்தி வருகிறோம். நிரந்தர பணியாளர்களாக எங்களை நியமிக்க அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். மேலும் பொதுமக்கள் குப்பைகளை தரும்போது அதை ஒன்றாக கலந்து வீட்டில் உள்ள அனைத்து கழிவுகளையும் ஒரே குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர். அந்த குப்பைகளை பிரித்து வைத்து கொடுத்தாலும் மேலும் ஆங்காங்கே தெருக்களில் வீசாமல் வைத்திருந்து நாங்கள் வருகையில் கொடுக்க வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர் இந்த தூய்மை பணியாளர் பெண்கள்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Ajith, Cleaning workers, Local News, May day, Pudukkottai