Home /pudukkottai /

புதுக்கோட்டை வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா- திரளான மக்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா- திரளான மக்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை கோவில் குடமுழுக்கு

புதுக்கோட்டை கோவில் குடமுழுக்கு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Aranthangi, India
அறந்தாங்கி மற்றும் 30 கிராம மக்களின் காவல் தெய்வமாக இருந்து அருள்பாளித்து மக்களை காத்து நிற்கும் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது வீரமாகாளியம்மன் திருக்கோவில். அறந்தாங்கி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், வேண்டுதல்களை வேண்டியவுடன் வழங்கும் தாயாகவும் இருந்து அருள்பாளித்து வருகிறாள் வீரமாகாளியம்மன்.

கோவிலில் குவிந்த மக்கள்


சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அம்மனுக்கு கோவில் கட்ட சிற்பம் வடித்த போது சிறு விபத்தில் அம்மனின் விரல் பகுதி சேதமடைந்து விட்டதாகவும், அதனால் அப்பகுதி மக்கள் மனது சோர்வடைந்து இருந்தபோது, கனவில் தோன்றிய அம்மன் தனது கோவில் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு ஆட்டை அவிழ்த்து விடவும் அந்த ஆடு உட்காரும் இடத்தில் தான் இருப்பதாகவும் கனவில் கூறியுள்ளார்.

கோவிலில் குவிந்த மக்கள்


அதன்படியே செய்த போது, ஆடு படுத்த இடத்தில் அம்பாளின் திருவுருவச் சிலை கிடைத்ததாகவும், கோவிலின் தல வரலாறு கூறுகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு அம்பாளுக்குத்தான் முதல் பத்திரிக்கை போன்ற பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.

கோவிலில் குவிந்த மக்கள்


எந்த மனக்குறை இருந்தாலும், 'வீரமாகாளிக்கிட்ட சொன்னா உடனே சரி பண்ணிருவா ஆத்தா' என நம்பிக்கையோடு வந்து அம்பாளிடம் முறையிடுகின்றனர். நாகதோஷம் உள்ளிட்ட திருமண தோஷங்களுக்கு பரிகாரத் தலமாகவும் அம்பாளின் திருக்கோவில் விளங்கி வருகிறது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆலய வளாகத்தில் ஆண்கள், பெண்கள் என எழுமிச்சை தீபங்கள் உட்பட பல்வேறு தீபங்களை ஏற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அம்பாளின் கோவிலில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு திருக்குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

அம்பாளின் இந்த கும்பாபிஷேகத்தில் அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

அனைவருக்கும் பல்வேறு கிராமத்தினர் மற்றும் குழுவினர்கள் சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி