Home /pudukkottai /

Pudukkottai | ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரை சிலையைக் கொண்ட ஐய்யனார் கோவில் சிறப்புகள் தெரியுமா?

Pudukkottai | ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரை சிலையைக் கொண்ட ஐய்யனார் கோவில் சிறப்புகள் தெரியுமா?

புதுக்கோட்டை ஐய்யனார் கோவில்

புதுக்கோட்டை ஐய்யனார் கோவில்

ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரை சிலையைக் கொண்ட கோவிலாக குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட ஐயனார் திருக்கோவில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Aranthangi, India
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலத்தில் வில்லுணி ஆற்றின் கரையில் அமர்ந்து அருள்பாளிக்கிறார் அருள்மிகு பெருங்காரையடி மீண்ட ஐயனார்.
கீரமங்கலம், கொத்தமங்கலம், வன்னியன்விடுதி, மறமடக்கி, திருநாளூர், வடகாடு, மாங்காடு, மேற்பனைக்காடு, செரியலூர், பனங்குளம், சேந்தன்குடி, சிட்டங்காடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் காவல் தெய்வமாக ஐயனார் அருள்பாளித்து வருகிறார்.

ஐயனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாளிக்கும் இத்திருத்தலம் ஆலங்குடியில் இருந்து 15 கிமீ தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 35 கிமீ தொலைவிலும், அறந்தாங்கியில் இருந்து 18கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் பனங்குளம் பாலத்தை அடைந்து அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் ஐயனார் கோவிலை அடையலாம். புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடியில் இருந்து கொத்தமங்கலத்தை அடைந்து அங்கிருந்து 4 கிமீ தூரத்தில் ஐயனார் கோவிலை அடைய முடியும்.

கருவறையில் ஐய்யனார்


நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்தக் கோவிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வசதி உள்ளது. மற்ற நேரங்களில் பனங்குளம் பாலம் அல்லது கொத்தமங்கலத்திற்கு பேருந்து மூலம் பயணித்து அங்கிருத்து வாடகை வாகனங்கள் மூலம் சென்றடையலாம்.

பெருங்காரையடி அய்யனார் கோவில்


மாசி மாதம் வரும் மக நட்சத்திர தினத்தன்று நடைபெறும் இரண்டு நாள் மாசிமகத் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மாசி மகத் திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களில் மட்டும் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெருங்காரையடி மீண்ட ஐயனாரை வழிபட்டு செல்வார்கள்.

பிரம்மாண்ட குதிரை சிலை


அன்று மட்டும் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட போக்குவரத்துக் கழக பனிமணைகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்தக் கோவிலின் முன்னர் அமைந்திருக்கும் 33 அடி உயர குதிரை சிலை ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை ஆகும்.

பிரம்மாண்ட குதிரை சிலை


இந்தக் குதிரை சிலைக்கு மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரை வருடப் பிறப்பு உள்ளிட்ட தினங்களில் காகிதங்களால் கட்டப்பட்ட ராட்சத மாலைகளை வேண்டுதலாக வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறிய உடன் மாலைகளை சாற்றுவது இப்பகுதி மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

குறிப்பாக மாசிமகத் திருவிழாவான இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கில் ராட்சத மாலைகளை குதிரைக்கு சாற்றி பக்தர்கள் நேற்றிக்கடனை செலுத்துவர். கடந்த ஆண்டு நடைபெற்ற மாசிமகத் திருவிழாவில் 2,000க்கும் மேற்பட்ட ராட்சத காகித மாலைகள் சாற்றப்பட்டன.

இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு அறந்தாங்கியில் இருந்து கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடி செல்லும் 22ம் எண் பேருந்து மதிய நேரத்தில் இரண்டு முறை இயக்கப்படுகிறது. ஆலங்குடியில் இருந்து கொத்தமங்கலம் வழியாகவும், மறமடக்கி வழியாகவும் மாற்றி மாற்றி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு பேருந்து வசதியும், அறந்தாங்கியில் இருந்து பனங்குளம் பாலம் வழியாக ஓரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்தும் இயக்க வேண்டும் என்பது குளமங்கலம் கிராம மக்கள் மற்றும் ஐயனாரின் பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஐய்யனார் கோவிலுக்குச் செல்லும் கூகுள் மேப் வழி


மேலும், நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்தக் கோவிலை வில்லுணி ஆற்றங்கரையோடு சேர்த்து சுற்றுலாத் தலமாக அமைத்துத் தர வேண்டும் என்பதும் குளமங்கலம் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். மேலும் கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் குடமழுக்கு நடத்தப்பட வேண்டும் என குளமங்கலம் கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி