Home /pudukkottai /

புதுக்கோட்டையில் ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 39-ம் ஆண்டு தேர்த்திருவிழா- ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டையில் ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 39-ம் ஆண்டு தேர்த்திருவிழா- ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

ஆரோக்கிய மாதா ஆலயம்

ஆரோக்கிய மாதா ஆலயம்

கீரனூர் அருகே தொண்மையான ஆரோக்கிய மலை மாதா திருக்கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆரோக்கிய மலை மாதா ஆலயத்தின் 39 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    5,000-க்கும் மேற்பட்டோர் கூட்டு திருப்பலியில் பங்கேற்று மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு ஜெப வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இதில் ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்து மதத்தினரும் ஆரோக்கியமலை மாதா திருத்தலத்திற்கு வந்து
    சிறப்பு கூட்டு திருப்பலியில் ஜெப வழிபாட்டில்
    பங்கேற்றனர்.

    ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் ஆரோக்கிய மலை மாதா ஆலயத்தின் மலைப்பகுதியில் மூன்று தேர் பவனி வந்தது.

    மேலும் திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஆரோக்கிய மலை மாதாவை சிறப்பு ஜெப வழிபாட்டு செய்து சென்றனர்.

    ஆரோக்கிய மலை மாதா ஆலய வளாகம் முதல் அனைத்து பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் திருவிழாவிற்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கண் கவர் வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி