Home /pudukkottai /

Pudukkottai | 8ம் வகுப்பு தனித்தேர்வர்களா நீங்கள்... அரசுத் தேர்வுகள் இயக்குநரின் முக்கிய அறிவிப்பு

Pudukkottai | 8ம் வகுப்பு தனித்தேர்வர்களா நீங்கள்... அரசுத் தேர்வுகள் இயக்குநரின் முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அ.பிச்சைமுத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    அக்டோபர் 2022ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி பெண்கள்மேல்நிலைப் பள்ளி, மணமேல்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை ராணியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

    தோ்வு கட்டணம் 175 ரூபாயை பணமாக சேவை மையங்களில் செலுத்த வேண்டும். செப்டம்பா் 10-க்குள் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் 12, 13 தேதிகளில் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 500 கூடுதலாகச் செலுத்தி பதிவு கொள்ளலாம்.

    ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தை தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள், தோ்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களை இணைக்க வேண்டும்.

    தனித்தோ்வா்கள் ரூ. 42-க்கான அஞ்சல் தலையை ஒட்டி, அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அக்டோபா் 10 ஆம் தேதி தமிழ், 11 ஆம் தேதி - ஆங்கிலம், 12 ஆம் தேதி - கணிதம், 13 ஆம் தேதி அறிவியல், 14 ஆம் தேதி - சமூக அறிவியல் என தினமும் காலை 10 முதல் 12 மணி வரை
    தோ்வுகள் தொடா்ந்து நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அ.பிச்சைமுத்து தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி