Home /pudukkottai /

சாலையோரங்களில் படுத்திருக்கும் கால்நடைகள்; விபத்து ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள்

சாலையோரங்களில் படுத்திருக்கும் கால்நடைகள்; விபத்து ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் படுத்திருக்கும் மாடுகள்

சாலையில் படுத்திருக்கும் மாடுகள்

புதுக்கோட்டையில் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் அலைவதால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Alangudi, India
    புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைகளில் அநாயாசமாக படுத்திருக்கும் கால்நடைகளால் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாடுகள் நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

    இது தொடர்பாக பல முறை வாகன ஓட்டிகள் முறையிட்ட பின்னர், ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து கட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, மாடுகளை பொது ஏலம் விடப்படும் என அறிவித்திருந்தது.

    அதன்பின்னரும் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் பிடித்து வந்து பேரூராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர். மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

    இதன்பின்னர் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் மாடுகள் சாலைகளில் அநாயாசமாகப்படுத்திருக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

    பேரூராட்சி நிர்வாகமும் இதை கருத்தில் கொள்ளாத நிலையில், அடிக்கடி ஏற்படும் விபத்துகளும் தொடர்ந்து வருகின்றன. அதிலும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளிலேயே மாடுகள் இதமாக படுத்து விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த மாடுகளால் இளைஞர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் விபத்துகளால் பாதிக்கப்பட்டு கை கால் முறிந்து சிகிச்சை பெற்ற நிலையில், உயிர் சேதம் ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாடுகள் நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் அவலத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகளும், ஆலங்குடி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி