ஹோம் /புதுக்கோட்டை /

ஜல்லிக்கட்டு காளைகள் வணங்கி செல்லும் விராலிமலை கோவில் பற்றி தெரியுமா?

ஜல்லிக்கட்டு காளைகள் வணங்கி செல்லும் விராலிமலை கோவில் பற்றி தெரியுமா?

X
காளைகள்

காளைகள் வணங்கும் புதுக்கோட்டை திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோவில்

Pudukottai Jallikattu Temple | புதுக்கோட்டை திருநல்லூரில் 7 வாடிவாசலில் காளைகள் அடைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அவிழ்க்கப்படும் இது போன்ற முறை தமிழகத்தில் வேறு எங்கும் இதுவரை இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை அருகில் உள்ள தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில் அனைத்து மாவட்ட காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு செல்லும் முன்னர் முதலில் இங்கு வந்து ஆசி பெற்று அதன் பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்.

சுயம்புவாக அவதரித்த மாரியம்மனை மூலவராக கொண்ட கோயில் தான் இந்த முத்துமாரியம்மன் கோயில். பொதுவாக அனைத்து மாவட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் முதலில் இங்கு வந்து சாமியிடம் ஆசி பெற்ற பின்பு தான் எந்த ஒரு போட்டிக்கும் களம் இறங்கும்.

மும்மதத்தினர் நடத்தும் ஜல்லிக்கட்டு:

இது குறித்து பேசிய ஊர் மக்கள் ”இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என மும்மதமும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு திருநல்லூர் தான். பரிசுகள் வழங்கப்படாத போதிலும் ஆயிரக்கணக்கான காளைகள் பங்கேற்பதுவே இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் சிறப்பு ஆகும்... 7 வாடி வாசல்கள் ஒரே திடலில் காணப்படுவது இங்கு மட்டுமே.

விராலிமலை தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில்

தமிழகத்தை பொருத்தவரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான அதிக வாடிவாசல் மற்றும் அதிகம் நடத்தப்படும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கின்றது.

இதில் குறிப்பாக திருநல்லூர்(தென்னலூர்)ஜல்லிக்கட்டு போட்டி என்பது புதுக்கோட்டை மாவட்டம் மட்டும் அல்லாது பக்கத்து மாவட்டங்களிலும் மிகவும் பிரபலமாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் திருநல்லூரில் 7 வாடிவாசலில் காளைகள் அடைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அவிழ்க்கப்படும் இது போன்ற முறை தமிழகத்தில் வேறு எங்கும் இதுவரை இல்லை இதனால் அந்த காலத்திலேயே திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பல்வேறு மாவட்ட பார்வையாளர்கள் அங்கு திரள்வார்கள்.

தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கோவை என பல்வேறு மாவட்டங்களில் காளை வளர்ப்போர்கள் தங்கள் வளர்க்கும் காளைகளை முதன் முதலில் திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலின் முன் நிறுத்தி வழிபாடு நடத்தி வாடிவாசலில் அவிழ்த்த பின்பு தான் மற்ற ஊர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து செல்வதை இன்று வரை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனால் வருடம் முழுவதும் தினம்தோறும் ஜல்லிக்கட்டு காளைகள் இங்கு வருவதை காண முடியும்” என்று கூறினார். திருநல்லூரின் சிறப்பை எடுத்து காட்ட வேறு என்ன வேண்டும்.

திருநல்லூர் ஜல்லிக்கட்டு

தற்போது திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பார்வையாளர்கள் மட்டுமல்லாது காளை வளர்ப்போர், பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பலரும் வாடிவாசல் திறப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Pudukottai