புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் தேனூர் வருவாய் கிராமத்தில் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் தமிழக அரசு துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் திட்டங்கள் மூலம் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ,ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தாட்கோ, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், உள்ளிட்ட துறைகளின் சார்பில் 1291 பயனாளிகளுக்கு ரூபாய் 2,07,88,607 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா வழங்கினார்.
ஏழை, எளிய பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தேனூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,291 பயனாளிகளுக்கு ரூபாய்.2,07,88,607 பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நல திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பேசுகையில், “பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள், மக்களை தேடி சென்று குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என பேசினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளை தடுக்க பாலின சமத்துவ உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai