முகப்பு /புதுக்கோட்டை /

அறந்தாங்கி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நூதன போராட்டம் நடத்திய மக்கள்.. 

அறந்தாங்கி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நூதன போராட்டம் நடத்திய மக்கள்.. 

X
நூதன

நூதன போராட்டம் நடத்திய மக்கள்

Aranthangi : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கோபாலபட்டிணம் பகுதியில் உள்ள அவுலியாநகரில் அடிப்படை வசதிகளை செய்யக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட கோபாலபட்டிணம் பகுதியில் உள்ள அவுலியாநகரில் அடிப்படை வசதிகளான சாலைகள் கழிவு நீர் கால்வாய் மற்றும் குப்பைகள் அல்லாமல் சாலையிலே கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

நூதன போராட்டம் நடத்திய மக்கள்

மேலும், பள்ளி கூடம் அருகே கழிவுநீரும், குப்பைகளும் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனை பலமுறை அதிகாரியிடம் கூறியும் எவ்வித நடவடிக்கை இல்லை எனவும் அவுலியா நகர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டியும் சாக்கடை நீரை ஊற்றியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Pudukkottai