ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் வரும் 11ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டையில் வரும் 11ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நவவம்பர் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்  மாதத்தின் 2ஆம் மற்றும் 4ஆம் வெள்ளிக் கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வரும் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் 20 க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல், பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி , தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய, தேர்வு செய்ய உள்ளனர்.

Must Read : கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை தேடுபவர்கள் 11ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முகாமைகலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Job Fair, Job Vacancy, Local News, Pudukkottai