ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மக்களே.. நாளை இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை மக்களே.. நாளை இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Pudukottai | புதுக்கோட்டை அருகே புனல்குளம் தொகுப்பு துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை ஏற்படும்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 24) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    புதுக்கோட்டை அருகே புனல்குளம் தொகுப்பு துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்தடை ஏற்படும் இடங்கள்:

    புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர், மூக்கப்புடையான்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Power Shutdown, Pudukottai