முகப்பு /புதுக்கோட்டை /

உஷார்... புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை 

உஷார்... புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை 

மின்தடை

மின்தடை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்  காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (23-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று புனல்குளம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள புனல்குளம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல் பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன் குறிச்சி, விராலிப்பட்டி, நத்த மாடிப்பட்டி, நொடியூர், கோமாபுரம்,

Must Read: விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன் பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, பருக்கை விடுதி, மூக்கப்புடையான் பள்ளம் ஆகிய இடங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai