முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை பகுதிகள்

மின் தடை பகுதிகள்

Pudukkottai district | புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மற்றும் திருமயம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (16-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று புதுக்கோட்டை செயற்பொறியாளர் மற்றும் திருமயம் கோட்ட உதவி செயற்பொறியாளர் ராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் இடங்களான ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரிநகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் வினியோகம் இருக்காது.

Must Read : வடிவேலு நடித்த ‘கைப்புள்ள வீடு’ எங்கிருக்கிறது தெரியுமா? - அடடே.. முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

திருமயம் துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமாரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளளது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் திருமயம், மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியர்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, கே.பள்ளிவாசல், பி.அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியப்பட்டி, ராங்கியம், கொல்லக்காட்டுப்பட்டி, கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை மற்றும் பெல் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகம் இருக்காது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai