முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள்... இதில் உங்க ஏரியா இருக்கா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள்... இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Pudukkottai district | புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட சில துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (04-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் மற்றும் பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மின் தடை பகுதிகள்:

மேலத்தானியம் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை, சூரப்பட்டி, மேலத்தானியம், காரையூர் ஆகிய பகுதிகளில் நாளை வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், வல்லவாரி, அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், ஆவுடையார்கோவில், கரூர், திருப்புனவாசல், அரசர்குளம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai