ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்கள் ஏரியா இருக்கா? 

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்கள் ஏரியா இருக்கா? 

மின் தடை

மின் தடை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாத்தூர், இலுப்பூர் மற்றும் பாக்குடி மற்றும் குளத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் நேரம் பற்றிய விவரங்களை மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து, மற்றும் உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மின்தடை பகுதிகள்:

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமிஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி மற்றும் சஞ்சீவிராயர் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இலுப்பூர், பாக்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெறும் இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Must Read : மேகங்கள் விளையாடும் வால்பாறை... 3 நாள் டூர் பிளான் - குடும்பத்தோடு என்ஜாய் பண்ணலாம்!

இதேபோல, குளத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதிகளில் நீங்களாக குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரகதாம்பாள்புரம், கிருஷ்ணம் பாரப்பட்டி, சத்தியம்மங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலை ராயபுரம், உப்பியக்குடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி மற்றும் நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai