ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் மழையூர் துணை மின் நிலையத்தில் இன்று (28-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்

ஆலங்குடி மற்றும் மழையூர் துணைமின் நிலையங்களில் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே. ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவார் மற்றும் ஆத்தங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Must Read : வியக்கவைக்கும் விழுப்புரம் பனமலை ஓவியங்கள்..! கட்டாயம் போய் பாருங்க..! 

இதேபோல், வடகாடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர் மற்றும் சூரன்விடுதி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai