ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை

புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை

மின் தடை

மின் தடை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

சிப்காட் துணை மின் நிலைய பகுதியில், நாளை இந்த பகுதிகளில் மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் நாளை மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read :அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

அதன்படி, சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான் பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி ஆகிய இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி, ஜீவா நகர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களிலும் நாளை காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai