முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி

புதுக்கோட்டையில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி

X
கண்காட்சியில்

கண்காட்சியில் மாணவர்கள்

Pudukkottai | புதுக்கோட்டையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழக அரசின் ஓயா உழைப்பின் ஓராண்டு... கடை கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி.. என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் மன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்மன்ற வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் இந்த கண்காட்சியானது சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

புகைப்பட கண்காட்சியில் மக்களை தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கான இலவச நகர பேருந்து பயணத் திட்டம் போன்ற தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் தொகுத்து புகைப்படங்களாக நேர்த்தியுடன் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

‘நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி’ - புதுக்கோட்டையில் உளுந்து விதைகள் மானியத்தில் விற்பனை

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 01.02 2023 வரை தொடர்ந்து நடைபெறும். புதுக்கோட்டை நகர மன்றம் வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பள்ளி, மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Pudukkottai