Home /pudukkottai /

புதுக்கோட்டையில் ஒரு குட்டி ஊட்டி.. அசத்தும் விவசாயி...

புதுக்கோட்டையில் ஒரு குட்டி ஊட்டி.. அசத்தும் விவசாயி...

புதுக்கோட்டையில்

புதுக்கோட்டையில் ஒரு குட்டி ஊட்டி.. அசத்தும் விவசாயி...

Pepper Cultivation in Pudukottai | வறண்ட பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் சமதளப் பகுதியில் மலைப்பிரதேசப் பயிரான மிளகை விளைய வைத்து சாதனைகளை செய்து வருகிறார் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தமிழ்செல்வன்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
வறண்ட பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் மலைவாழ் இடம் போல குளு குளு  சூழலை உருவாக்கி இருக்கிறார் இயற்கை விவசாயி ஒருவர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட இவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மீது கொண்ட பற்றால், நம்மாழ்வாரின் வழிகாட்டுதல் படி இயற்கை விவசாயத்தை 20 ஆண்டுகளுக்கு முன்னர் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.

ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த தொடங்கிய பின்னர் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றமும் நிம்மதியான சுற்றுச்சூழலும் ஏற்பட்டதாகக் கூறுகிறார் செந்தமிழ்செல்வன். வறண்ட பூமியாகவும் அடிப்படையில் செம்மண் தன்மை கொண்ட பகுதியாகவும் விளங்கும் பகுதியில் குளிர் பிரதேச பயிர்களையும், கரிசல் மண் பயிர்களையும் பயிரிட முடிவு செய்து முயற்சி செய்த அவருக்கு விளைச்சல் அதிகமாக இருந்ததோடு விளைபொருட்களின் சுவையும் அதீதமாக இருந்ததைக் கண்டு உற்சாகமடைந்த செந்தமிழ்செல்வன் தொடர்ச்சியாக மலைப்பிரதேச பயிரான மிளகு விவசாயத்தை பிரதானமாக செய்ய தொடங்கி உள்ளார்.

மிளகு பயிர்


மிளகுக்கு கிராக்கி:

2013 ம் ஆண்டு மிளகு விவசாயத்தை ஆரம்பித்த போது ஏக்கருக்கு 200 கிலோ மிளகு உற்பத்தி செய்த நிலையில் தற்போது ஏக்கருக்கு 500 கிலோ மிளகு உற்பத்தி செய்வதாக  தெரிவிக்கிறார்.
மேலும், கரிசல் மண் பயிரான பருத்தியை பயிரிட்டு அதிகமான மகசூலைப் பெற்று வருகிறார் செந்தமிழ் செல்வன்.
மேலும், இந்த பயிர்களில் இருந்து கிடைக்கும் விளைபொருட்களின் சுவையும், தரமும் அதன் பூர்வீக இடங்களில் கிடைக்கும் சுவை தரத்தை விட அதிகமாக இருப்பதால் அதிக விலைக்கு விற்பதாகவும் இந்த விவசாயம் தனக்கு லாபகரமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

மாணவர்களுக்கு விவசாய பயிற்சி:

மேலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் செந்தமிழ்செல்வனின் வீட்டிலேயே தங்கி இருந்து அவரிடம் விவசாயம் குறித்த தகவல்களையும், பயிற்சிகளையும் பெற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு விவசாய பயிற்சி


ஆண்டொன்றுக்கு 25 மாணவர்கள் வரை 2 மாதத்திற்கும் மேலாக செந்தமிழ்செல்வன் வீட்டிலேயே தங்கி இருந்து இயற்கை விவசாயத்தை கற்று வருகின்றனர்.

செந்தமிழ்செல்வன் தனது வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகள் முழுவதிலும் இயற்கை விவசாயத்தோடு மிளகு பயிரை பிரதான விவசாயகமாக செய்வதால் வெயிலின் தாக்கம் துளியும் இன்றி மொத்த இடத்திற்கும் ஏசி பொருத்தியது போல் குளு குளுவென ஜில்லிடுகிறது.

மிளகு பயிர்


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அனைத்திற்கும் காரணம் தனது முயற்சியும் இயற்கை முறை விவசாயமும் தான் என பெருமிதம் கொள்ளும் செந்தமிழ் செல்வன் வீட்டின் அருகே தேனி வளர்ப்பு வீட்டிற்கு உள்ளே திராட்சைக் கொடிகள் என பிரகாசிக்கிறார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukottai

அடுத்த செய்தி