ஹோம் /புதுக்கோட்டை /

நீங்க வரவேண்டாம்; நான் வரேன்.. புதுக்கோட்டை ஆட்சியரின் செயலால் குவியும் பாராட்டு!

நீங்க வரவேண்டாம்; நான் வரேன்.. புதுக்கோட்டை ஆட்சியரின் செயலால் குவியும் பாராட்டு!

பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்.

பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்.

மனுக்களை அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை சிரமப்படுத்தாமல் நேரில் சென்று மனுக்களை வாங்கிய மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மனுக்கள் பெற்றுக்கொண்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி நாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்நடைபெற்றது. அதையொட்டி அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் அதில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் ஆட்சியரே நேரில் சென்று மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து இருந்த இருக்கை அருகே சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களை வியப்பில்ஆழ்த்தியது. மாவட்ட ஆட்சியரே மாற்றுத்திறனாளிகளின் நிலை கண்டு அவர்களை சிரமப்படுத்தாமல் அவர்கள் இருக்கை அருகே வந்து மனுக்களை பெற்ற விதத்தை வெகுவாக பாராட்டினர்.

அதே போல் குறைதீர் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு , கல்வி உதவித் தொகை மற்றும் பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து பெற்றார். அதேபோல் அந்தமீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

First published:

Tags: District collectors, Local News, Pudukkottai