ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க குவிந்த பொதுமக்கள்

புதுக்கோட்டையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க குவிந்த பொதுமக்கள்

 புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News | முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்திற்கு  விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த புதுக்கோட்டை மக்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கோடு, முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டம் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

  இத்திட்டத்தின் கீழ் சுமார் 1100 வகையான சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளையும் இலவசமாக பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் வரும் நோயாளிகளுக்கு 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றன.

  ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இந்த திட்டம் மூலம் சிகிச்சை பெறலாம். ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இரண்டும் 2018ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இதையும் படிங்க : உரங்களை இப்படி விற்றால் கடும் நடவடிக்கை- புதுக்கோட்டையில் புகார் எண் அறிவிப்பு

   தனியார் காப்பீட்டு நிறுவனத்தை கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர். இதுபோன்ற திட்டம் தங்களுக்கு ஆபத்து நேரத்தில் மிகவும் பயன் அளிப்பதாக விண்ணப்பிக்க வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

  செய்தியாளர் :  சினேகா - புதுக்கோட்டை

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai