ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவை புதுப்பிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவை புதுப்பிக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

புதுக்குளம்

புதுக்குளம் பூங்கா

Pudukkottai park renovation | புதுக்கோட்டை நகரிலுள்ள புதுக்குளம் பூங்கை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புதுக்குளம் பூங்கா நகர மக்களின் பிரதான பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது.

இந்த புதுக்குளம், தொண்டைமான் மன்னர்களின் காலத்தில் நகரின் குடிநீர் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு குளமாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த குளத்தில் இருந்த தண்ணீரை அந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார்கள் மூலமாக அருகாமையில் இருக்கக்கூடிய உயரமான நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கி வைத்து அங்கிருந்து நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதற்கான அடையாளங்களான நீரைத் தேக்கி மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுத்ததற்கான அடையாளச் சான்று இன்றும் காணக்கிடைக்கின்றன. இவ்வளவு பெருமை மிக்க இந்த குளத்தை சுற்றி மாவட்ட நிர்வாகத்தால் பூங்கா ஏற்படுத்தப்பட்டது.

சிறுவர்கள் விளையாடும் பகுதி

இங்கே பொதுவாக நகர மக்கள் அதிக அளவில் தங்களது பொழுது போக்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். கூடுதலாக புதுக்கோட்டை நகருக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள் தங்களது ஓய்வு நேரத்தை இந்த புதுக்குளம் பூங்காவில் செலவழிக்கின்றனர்.

சேதமடைந்த நிலையில் இருக்கும் பூங்கா

நகரின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் மக்களுக்கும் உறைவிடமாகவும், ஓய்விடமாகவும் விளங்கிவரும் புதுக்குளம் பூங்கா. இதற்கான தேவைகளும் பல இருந்து வருகின்றன.

புதுக்குளம்

சில காலத்திற்கு முன்னதாக இயக்கப்பட்ட படகு சவாரியை மீண்டும் இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக இந்த புதுக்குளம் பூங்கா மாறும் என எதிர்பார்க்கின்றனர் புதுக்கோட்டை மக்கள்.

மேலும் பூங்காவில் அமைந்துள்ள நடைபாதைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளை சீர்செய்து புதுமைப்படுத்தி அதோடு மட்டுமில்லாமல் இருக்கைகளுக்கு மேலாக மேற்கூரை அமைத்துத் தர வேண்டும் என்பதும் புதுக்கோட்டை மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் புதுக்குளம் பூங்காவின் கடைகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் இருந்து வரும் நிலையில் இந்த குப்பைகளை அகற்றி சரிவர பராமரித்து தூய்மையான சூழ்நிலையை பின்பற்ற வேண்டும் என்பதும் ஒரு எதிர்பார்ப்பாகும்.

புதுக்குளம் பூங்காவை பெண்கள், மாணவிகள் என பல தரப்பினரும் பயன்படுத்தி வரும் நிலையில் இங்கு கழிப்பிட வசதி சரியாக இல்லை. முழுமையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்த கழிப்பறையை சுத்தம் செய்து முறையாக பராமரித்தால் புதுக்குளம் பூங்கா மக்களின் பிரதான பூங்காவாக பழைய நிலைக்கு செல்லும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai