Union
Budget 2023

Highlights

ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள்

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள்

நீட் தேர்வு பயிற்சி மையம்

நீட் தேர்வு பயிற்சி மையம்

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு, 13 இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளி மா ணவர்களுக்கு 'நீட்' தேர்வு தொடர்பாக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 26ஆம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வரை ஆன்லைன் வழியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், நேரடி முறையிலான நீட் பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை மட்டுமே நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்பது பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள விதிமுறையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் தலா ஒரு மையம் என்ற அடிப்படையில் 13 இடங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மையம் தொடங்கியது.

Must Read : நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?

இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பயிற்சியானது தொடர்ந்து அளிக்கப்படும் 'நீட்' தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Neet Exam, Pudukkottai