முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் இல்லம் தேடிக் கல்வி.. தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி!

புதுக்கோட்டையில் இல்லம் தேடிக் கல்வி.. தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி!

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி வட்டார வள மையம் , மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் இப்பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு.செழியன் மணமேல்குடி வட்டார வள மையத்தில் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் தன்னார்வலர்களுக்கு ஒவ்வொரு மாணவரின் திறன்களுக்கு ஏற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.

அதேபோல் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் அடிப்படை திறன்களை மாணவர்கள் பெற்றுள்ளனரா என்பதை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவு திறன் அட்டவணையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

First published:

Tags: Local News, Pudukkottai