முகப்பு /புதுக்கோட்டை /

டான்சர்களுக்கு டஃப் கொடுத்த புதுக்கோட்டை முதியவர்.. நடுரோட்டில் வேற லெவல் ஆட்டம்..

டான்சர்களுக்கு டஃப் கொடுத்த புதுக்கோட்டை முதியவர்.. நடுரோட்டில் வேற லெவல் ஆட்டம்..

X
கோயில்

கோயில் திருவிழாவில் நடனம் ஆடிய முதியவர்

Old Man Dance : புதுக்கோட்டையில் திருவிழாவின்போது சாலையோரம் நின்றிருந்த முதியவர் உற்சாகத்தில் நடனம் ஆடி அசத்தினார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டையில் திருவிழாவின்போது உற்சாக மிகுதியில் சாலையோரம் நின்றிருந்த முதியவர் நடனம் ஆடி அசத்தினார்.

கோயில் திருவிழாக்கள் என்றாலே ஆட்டம். பாட்டம் என களைகட்டுவது வழக்கம். இதுபோன்ற திருவிழா நாட்களில் கோயில் நிர்வாகம் மற்றும் ஊர்மக்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

இதற்கிடையில், கலைமனம் கொண்ட சிலர் ஆங்காங்கே தன்னெழுச்சியாக ஆடிப் பாடுவதை பார்த்திருப்போம். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முதியவர் சாலையில் உற்சாகமாக ஆடினார்.

கோயில் திருவிழாவில் நடனம் ஆடிய முதியவர்

இதையும் படிங்க : விவசாயத்திற்கு நீர் தேவை எவ்வளவு முக்கியம் - தஞ்சை சித்தரின் சிந்திக்க வைக்கும் தகவல்கள்.. 

நேர்த்தியான அந்த ஆட்டத்தை அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி பார்த்து ரசித்தனர். அந்த முதியவரோ பற்கள் விழுந்த தனது அழகான வாயால் புன்முறுவர் பூத்தும், உற்சாகத்தில் சிரித்தவாறும் நெளிந்து, அசைந்து பலரும் ரசிக்கும்படி ஆடி அசத்தினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Pudukottai