ஹோம் /புதுக்கோட்டை /

2023 ஆம் ஆண்டு இப்படித்தான் இருக்கும்..? புதுக்கோட்டை ஜோதிடரின் புத்தாண்டு கணிப்பு..!

2023 ஆம் ஆண்டு இப்படித்தான் இருக்கும்..? புதுக்கோட்டை ஜோதிடரின் புத்தாண்டு கணிப்பு..!

X
எப்படி

எப்படி இருக்கும் 2023ம் ஆண்டு

Pudukkottai Astrologer : 2023 ஆம் ஆண்டில் தமிழகம் எப்படி இருக்கும் என்று புதுக்கோட்டை ஜோதிடர் மாரிக்கண்ணன் கணித்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

ஜோதிட கணிப்பில் 2023 புத்தாண்டு எப்படி அமைய போகிறது என விளக்குகிறார் புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை 47 வருடமாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வருகின்ற மாரிக்கண்ணன்.

அவர் பேசுகையில், “ராசியின் படி தமிழ்நாட்டிற்கு மேஷ ராசியாகவும் இந்தியாவிற்கு மகர ராசியாகவும் உள்ளது.

ஆங்கில புத்தாண்டின் பிறப்பு மேஷ ராசியாக உள்ளது. புத்தாண்டின் பிறப்பானது தனி மனிதருக்கும் நல்லதும், தீமையும் உண்டு. நாட்டிற்கும் நல்லதும், தீமையும் உண்டு இரண்டும் மாறி மாறி நிகழும்.

முதலில் ராகுவும் சந்திரனும் அமைப்பு முறைகள் உள்ளன.

இந்திய அரசாங்கம் ராணுவத்திற்கு அதிக செலவுகளை செய்ய வேண்டிய காலகட்டம் உள்ளது. அண்டை நாடுகளால் ஏதாவது நிகழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இதையும் படிங்க : புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழா.. 

கல்வியை பொறுத்தவரை மாநிலம் மற்றும் மத்திய அரசு இரண்டிலும் உயர் நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் தொழில் முனைவோர்களை வருகின்ற வருடம் அதிகமாக உருவாக்கப் போகிறது.

ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நல்லபடியாக இருக்கும். எந்த அச்சமும் பட தேவையில்லை.பெண்களைப் பொறுத்தவரை உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விவசாயத்தை பொறுத்தவரை நல்ல முறையில் போகும்.

மொத்தமாக குறிப்பிடும்போது தமிழ்நாடு அவுட் ஸ்டாண்டிங் நிலைக்கு செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

செய்தியாளர் :  சினேகா விஜயன் - புதுக்கோட்டை

First published:

Tags: Astrology, Local News, New Year 2023, Pudukkottai