முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்.. மக்கள் வெள்ளத்தில் தேர் பவனி..

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்.. மக்கள் வெள்ளத்தில் தேர் பவனி..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்

Narthamalai Sri Muthumariamman Temple : புதுக்கோட்டை நார்த்தாமலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

புதுக்கோட்டை நார்த்தாமலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

இந்த நிலையில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பரவ காவடி மற்றும் கரும்பு தொட்டிலில் குழந்தை எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையும் படிங்க : பிரிட்டிஷ் பெண் முயற்சியில் கல்வியறிவு பெற்ற நெல்லை பெண்கள்.. யார் இந்த சாரா டக்கர்?

அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் அம்மனை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்களுடன் வாணவேடிக்கை முழங்க தேரோட்டம் நடந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

    First published:

    Tags: Local News, Pudukkottai