முகப்பு /புதுக்கோட்டை /

தென்னங்குடியில் விமரிசையாக நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்..

தென்னங்குடியில் விமரிசையாக நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்..

X
தென்னங்குடி

தென்னங்குடி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

Pudukkottai News|புதுக்கோட்டை தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது . சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்  அம்மன் அருள் பெற்றனர். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

தென்னங்குடியில் விமரிசையாக நடைபெற்ற முத்துமாரியம்மன் தேரோட்டம் புதுக்கோட்டை தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது . சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் அம்மன் அருள் பெற்றனர்.

புதுக்கோட்டை அருகே தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஸ்ரீ முத்துமாரியம்மனை சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு தீபாராதனை காண்பித்து வாண வேடிக்கையுடன் தேர் இழுக்கப்பட்டது.

சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றனர் .தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அமர்ந்தவாறு வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்தார்.

top videos
    First published:

    Tags: Local News, Pudukottai