முகப்பு /புதுக்கோட்டை /

மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்காரர்களே உஷார்.. மே மாத ராசிப்பலன்களை கணித்த புதுக்கோட்டை ஜோதிடர்..

மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்காரர்களே உஷார்.. மே மாத ராசிப்பலன்களை கணித்த புதுக்கோட்டை ஜோதிடர்..

X
மாதிரி

மாதிரி படம்

May Month Rasipalangal 2023 : மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான மே மாத பலன்களை புதுக்கோட்டை ஜோதிடர் கணித்து கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜோதிட கணிப்பாளர் சௌமியா கண்ணன் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ஆகிய ராசிகளுக்கான மே மாத பலன்களை கணித்து கூறியுள்ளார்.

மேஷம்

உங்களுக்கு குரு பகவானும் சனி பகவானும் நன்மை செய்யும் இடங்களில் இருப்பதால் குடும்பத்தில் உயர்வு உண்டாகும். குழந்தைகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உயர்கல்வி ஏற்படும். வெளிநாட்டு யோகங்கள் சிலருக்கு கை கூடும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். துணைவரின் உடல் நிலையில் கவனம் தேவை. மே 12க்கு பிறகு சொத்தில் சில பிரச்சனைகளும் தாயின் உடல் நிலைக்கு சில செலவுகள் செய்ய நேரிடும். மே 6, 7, 8 இல் சற்று கவனம் தேவை வீண் சர்ச்சைகள் மறதி பண இழப்பு ஏற்படும்.

ரிஷபம்

மன கசப்பான சம்பவங்கள் நடைபெறும். பொறுமை தேவை. சொத்து மற்றும் இட பிரச்சனைகள் தீர்வாகும் நிலையில், அந்நியர் ஒருவரால் பாதிக்கப்படுவீர்கள். சிறிது செலவுக்கு பின்னே உடல் தேறும். எவ்வளவு உழைத்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். கடன் வாங்குவதை குறைக்க முயற்சி செய்யுங்கள். தந்தையை மருத்துவமனையில் சேர்க்க நேரிடும். 8, 9 ,10 தேதிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மிதுனம்

top videos

    குருவும் சனியும் உங்களுக்கு பூரண நலத்தை கொடுக்கும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். மே 12க்கு பிறகு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவஸ்தை படாதீர்கள். உங்கள் குழந்தைகளின் உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. ஆனால் அச்சம் வேண்டாம் அவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி மேம்படும் மே 11 ,12-ல் கவனக்குறைவால் சில சிக்கல்களும் இழப்பும் ஏற்படும்.

    First published:

    Tags: Local News, Pudukkottai, Rasi Palan