முகப்பு /புதுக்கோட்டை /

மருதாந்தலை அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு.. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்.. 

மருதாந்தலை அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு.. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்.. 

X
மருதாந்தலை

மருதாந்தலை அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு

Maruthanthalai Ayyanar Temple Jallikattu | புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சித்திரை திருவிழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை ஸ்ரீஅய்யனார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதற்கு களமிறங்கினர். வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கினர். பல காளைகள் காளையர்களின் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்து தப்பித்துச் சென்றன. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின.

மருதாந்தலை அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு

தொடர்ந்து, வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Pudukkottai