முகப்பு /புதுக்கோட்டை /

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான மே மாத பலன்கள்.. புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு..

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான மே மாத பலன்கள்.. புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு..

X
மாதிரி

மாதிரி படம்

Rasi Palangal For May Month 2023 | மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான மே மாத பலன்களை புதுக்கோட்டை ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் கணித்து கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் மகரம்,கும்பம் மற்றும்மீனம் ஆகிய ராசிகளுக்கான மே மாத பலன்களை கணித்துக் கூறியுள்ளார்.

மகரம்

எதிர்பாராத பண வரவு ஏற்படும். உடல்நலம் முன்னேற்றமடையும். தாய்க்கு மருத்துவ செலவு ஏற்படும். மே 12 க்கு பிறகு போட்டி தேர்வுகளில் வெல்ல வாய்ப்புண்டு. மாத பிற்பகுதியில் துணைவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் சிலருக்கு அல்சர் பிரச்சனை ஏற்படும். மே 27 ,28 திட்டமிட்டு காரியங்களை ஆற்றுங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்

உடல் சோர்வும் அசதியும் ஏற்படும் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்படும். சிலருக்கு மேல அதிகாரிகளிடம் விரோதமும் பனிச்சுமையும் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு அதிகம் உழைக்க வேண்டிய சூழல் வரும். உங்கள் துணைவரின் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 28 ,29 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தினங்கள். பயணங்களை தவிர்க்கவும் .வீணா அலைச்சல்களில் மனம் சோர்வு அடையும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மீனம்

குரு பகவான் தங்களுக்கு சாதகமாக செயல்பட்டாலும் பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றம் கொடுத்தாலும் அதனை தடுத்து நிறுத்தி விடுகின்றார் சனி பகவான். மருத்துவச் செலவுகள் நீண்ட நாள் நோயிலிருந்து விடுபடுவீர்கள். துணைவரின் தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும். வீண் அலைச்சல் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றம் சற்று தடைபடும். வில்லங்கம் வீடு தேடி வரும். மே 30 ,31 எதிலும் நிதானம் தேவைப்படும் நாள் தவறாக முடிவு எடுக்க வாய்ப்பு உண்டு. அன்று புதிய முயற்சிகளை எடுக்கவோ எதிலும் கையொப்பமிடவோ வேண்டாம்.

First published:

Tags: Local News, Pudukkottai, Rasi Palan