முகப்பு /புதுக்கோட்டை /

பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா.. ஆலங்குடி அருகே கோலாகலம்!

பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா.. ஆலங்குடி அருகே கோலாகலம்!

X
பிடாரியம்மன்

பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விவசாயம் செழிக்க வேண்டி பிடாரி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புலவன் காட்டில் பிடாரியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குடத்தை தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் புலவன்காடு கிராமத்தில், பிடாரி அம்மன் கோவில் மது எடுப்புத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மது எடுப்பு திருவிழா கடந்த 7 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில், பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாலையை வெட்டி வைத்து, பூச்சூடி மேளதாளங்கள் முடங்க ஊர்வலமாக சுமந்து வந்து கோவில் முன்பு திரண்டு, பிடாரியம்மனை நல்ல மழை பெய்ய வேண்டியும், நாடு செழிக்க வேண்டியும், விவசாயம் நன்றாக இருக்க வேண்டியும் வழிபட்டனர். இந்த விழாவில் கிராம பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Local News, Pudukkottai