Home /pudukkottai /

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்திருக்கிறது பிரசித்தி பெற்ற வீரமாகாளி அம்மன் கோவில். சுயம்புவாகத் தோன்றியதாக கருதப்படும் இந்த அம்மன், அறந்தாங்கி மற்றும் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்கிறது.

    கோயில் அருகே உள்ள மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் வீரமாகாளி அம்மனுக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்ததாகவும் ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், சேதம் ஏற்பட்டு விட்டதால், இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அன்றைய தினம் கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது என்று கூறி, என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும் என்று கூறியதாகவும் அவ்வாறே செய்ய அம்மன் பிரமாண்ட கற்சிலை கிடைத்துள்ளது. அந்தசிலை எட்டு கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்த அம்மனை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. திருமணம் நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் இங்கே சென்று வழிபடுகின்றனர்.

    இந்நிலையில், இந்த வீரமாகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுகிறது. இதை ஒட்டி நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி