முகப்பு /புதுக்கோட்டை /

வெள்ளி குதிரையில் வலம் வந்த குப்பக்குடி அய்யனார்.. புதுக்கோட்டையில் கோலாகலமாக தொடங்கிய  திருவிழா! 

வெள்ளி குதிரையில் வலம் வந்த குப்பக்குடி அய்யனார்.. புதுக்கோட்டையில் கோலாகலமாக தொடங்கிய  திருவிழா! 

X
வெள்ளி

வெள்ளி குதிரையில் வலம் வந்த குப்பக்குடி அய்யனார்

Pudukkottai District News | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குப்பக்குடி அய்யனார் கோவில் காப்பு கட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றி ஆண்டவர் அய்யனார் கோயில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதல் தொடங்கியது. அந்த பகுதிகளில் உள்ள 12 கிராமங்களுக்குச் சொந்தமான இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

மழை வேண்டியும், வேளாண்மை செழிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் இருந்து 62 கிலோ எடையில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி குதிரை வாகனத்தை மாட்டு வண்டியில் ஊர்வலமாக எடுத்து சென்று கோயிலூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த, ஐம்பொன்னாலான அய்யனார் சிலையை, அந்த குதிரை வாகனத்தில் அலங்கரித்து அமர வைத்து அதனை மீண்டும் கிராம மக்கள் குப்பகுடி கொண்டுவந்தனர். வெள்ளி குதிரையில் வீட்டில் இருந்த ஐம்பொன்னாலான அலங்கரிக்கப்பட்ட அய்யனார் சிலைக்கு மக்கள் வழிநெடுகிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், கோயிலில் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த தங்க ஆபரண பெட்டிகளையும் பலத்த பாதுகாப்போடு எடுத்து வந்த கிராம மக்கள், அதனை ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் அய்யனாருக்கு அலங்கரித்து சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் ஆராதனை விழாக்களை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த விழா இன்னும் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள நிலையில், நாள் தோறும் சுவாமி வீதியுலா காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் களைகட்ட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Pudukkottai