முகப்பு /புதுக்கோட்டை /

மாடுகளை தாக்கும் கோமாரி நோய்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்.. 

மாடுகளை தாக்கும் கோமாரி நோய்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்.. 

X
மாடுகளை

மாடுகளை தாக்கும் கோமாரி நோய்

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை இல்லாத கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் தடுப்பூசி வழங்குதல், குடற்புழு நீக்குதல் போன்ற சிகிச்சைகள், கால்நடைகளை தாக்கும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள், நோய் தடுப்பு முறைகள், கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதன் நோக்கம் போன்றவற்றின் விளக்கம் போன்றவை அளிக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்

மேலும், தாது உப்புகள், தீவனப்புல் போன்றவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. அத்துடன், கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்கப்படும் மானியங்கள் குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக, கோமாரி நோய் தடுப்பு முறையாக, நோய் பாதித்த கால்நடைகளை உடனடியாக தனியே வேறு இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். வருடத்திற்கு 2 முறை தடுப்பூசி போட வேண்டும்.

இதையும் படிங்க : புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்த நோயினை தடுக்க உகந்த வழி‌முறைகளாகும். தடுப்பூசி போடுவதால் பால் கறக்க முடியாமல் இழக்க நேரிடும் என்பது தவறான தகவல் என்பது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

First published:

Tags: Local News, Pudukkottai