Home /pudukkottai /

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கொடும்பாளூர் இதுதானா... புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா தலம்

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கொடும்பாளூர் இதுதானா... புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா தலம்

கொடும்பாளூர்

கொடும்பாளூர்

பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மனின் (முதலாம் ராஜராஜ சோழன்) மனைவியாக வரும் வானதி கொடும்பாளூரை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது புதுக்கோட்டையில் உள்ள முக்கிய சுற்றுலா தலம் ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
தொல்லியல் சிறப்பும், பாரம்பரியமும் வரலாற்று பெருமைகளையும் கொண்டது புதுக்கோட்டை மாவட்டம். பல்லவா்கள், சோழா்கள், பாண்டியா்கள், நாயக்கா்கள், முத்தரையா், தொண்டைமான், விஜயநகர மன்னா்கள் போன்ற அரச வம்சங்கள் புதுக்கோட்டை பகுதியை ஆட்சிபுரிந்துள்ளன. இத்தகைய மன்னா்களின் ஆட்சிக்காலங்களில் புதுமைகள் சேர்ந்து சேர்ந்து பாரம்பரிய பெருமைகள் வளர்ந்து இன்றளவும் அதன் சிறப்பு குறையாமல் இருந்து வருகிறது. இந்த சிறப்பு வாய்ந்த மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒர் முக்கிய இடமாக இருகிறது கொடும்பாளூர்.

கொடும்பாளூர்

கொடும்பாளூரின் தொன்மையும் சிறப்பும் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான் சிலப்பதிகாரத்தில் பேசப்பட்டுள்ளது. அதில், உறையூரில் தங்கயிருந்த கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றபோது அந்த நீண்ட நெடிய வழியில் முதலில் கடந்ததாகக் குறிப்பிடப் பெறுவது ‘கொடும்பை நெடுங்குள கோட்டகம்’ என்ற இடமாகும்.

பழங்கால கற்கோவில்


கொடும்பை என்பதே கொடும்பாளூர் என்று மருவியிருக்கிறது. அங்கிருந்த பெரிய ஏரிக்கரையைக் கடந்து செல்லும்போது சிவபெருமானின் திரிசூலம் போன்று அந்த வழியில் மூன்று தடங்கள் பிரிந்து சென்றதாகவும் அவற்றில் வலதுபுரம் இருந்த தடத்தின் வழியாக மதுரை நோக்கி அவர்கள் பயணம் செய்தனர் என்றும் இளங்கோவடிகள் குறித்துள்ளார்

தொன்மைப் புகழ்மிக்க இந்த ஊரைப் பற்றி சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மனின் (முதலாம் ராஜராஜ சோழன்) மனைவியாக வரும் வானதி கொடும்பாளூரை சேர்ந்தவர் என்று குறிப்பிடபட்டிருக்கும்.

மூவர் கோவில்

இந்த கொடும்பாளூர் புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருச்சியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள கலைநயம் மிக்க கோவில்கள் தென்னிந்திய கட்டிடகலைக்கு முன்னோடியாகத் திகழ்பவை. இங்குள்ள மூவா் கோவில், முச்சுகுண்டேஸ்வரா் கோவில் ஆகிய கோவில்கள் சோழா்கள் காலத்தில் கட்டப்பட்டவை. இன்றளவும் இவை சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கம் கலைநயமிக்கவைகளாக அமைந்துள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க கற்கோவில்கள் இங்கே உள்ளன. இந்த இடத்திற்கு சரித்திரத்தில் ஒரு தனி இடம் உண்டு.

கிணறு போன்ற அமைப்பு


இங்கிருக்கும் மூவர் கோவில் மற்றும் முசுகுந்தேஸ்வரர் கோயில் ஆகியவவற்றை கண்டு வியக்கலாம். இந்த போவிலுக்கு இடது பக்க மூலையில் ராஜ வம்சத்துப் பெண்கள் குளிப்பதற்கான கிணறு ஒன்று உள்ளது. அதன் உள்ளே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐவர் கோவில்

அதற்கு அருகில், ஐவர் கோவில் இருந்ததற்கான அடித்தளமும் மற்றொரு சிவன் கோவிலும் இருந்ததற்கான தடையங்களும் உள்ளன. ஐவர் கோயில் என்றழைக்கப்படும் ‘ஐற்றளி’ முற்றிலுமாக அழிந்து அதன் அடித்தளம் மட்டுமே இன்று காண முடிகிறது. இதை பல்லவ மன்னான ‘இராஜ சிம்மன்’ கட்டினான் என்பத்தைத் தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை.

அதன் அமைப்பை வைத்துப் பார்க்கையில், இங்கு ஐந்து தனித் தனி கோவில்கள் ஒரே இடத்தில் இருந்திருப்பது தெரிகிறது. இது இந்திய தொல்லியல்துறையில் கட்டுபாட்டில் இருக்கிறது. இங்குள்ள வரலாற்று சிறப்புகளை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர். வரலாற்று ஆய்வாளர்களோ இங்குள்ள கல்வெட்டுகளையும், சிறப்புகளையும் வியப்படும் கண்டு அதன் பெருமைகளை உணர்ந்து வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக கொடும்பாளூர் விளங்கி வருகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி