ஹோம் /புதுக்கோட்டை /

பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் மாதம் ₹ 50,000 வருமானம்.. புதுக்கோட்டை இளைஞரின் அசத்தல் பிசினஸ்..

பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் மாதம் ₹ 50,000 வருமானம்.. புதுக்கோட்டை இளைஞரின் அசத்தல் பிசினஸ்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை இளைஞரின் அசத்தல் பிசினஸ்..

Pudukkottai Areca Leaf Plate Making | புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாக்கு மட்டை தட்டுகளை தயாரிப்பதில் நல்ல பார்க்க முடியும் என்று நம்பிக்கை தருகிறார். இது குறித்து விரிவாக காணலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ஐடிஐ தொழிற்கல்வி படிப்பை முடித்து விட்டு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரபு நாடுகளில் வேலை பார்த்து வந்தார்.  கொரோனா காலகட்டத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய சிவக்குமார்,

வேறு வழியின்றி  விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நேரத்தில் சொந்த தொழில் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

சொந்த தொழில் ஆசை:

இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், சுய தொழில்  செய்ய ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களையும், கடன் உதவிகளையும் அளிப்பது குறித்து கேள்விப்பட்ட சிவக்குமார், சிறிய அளவிலான தொழில் ஒன்றை தொடங்கலாம் என முடிவெடுத்து அரசு அலுவலகங்களுக்கு உதவி கேட்டுச் சென்றிருக்கிறார்.

இந்த நேரத்தில்  கோவில்கள் தொடங்கி  உணவகங்கள் வரை பல இடங்களிலும் பிரசாதங்கள், உணவுகள் வழங்க பாக்கு மட்டையிலான தட்டுகள் மற்றும் தொன்னைகளை வழங்குவதைக் கண்டுள்ளார். உடனடியாக இது தொடர்பாக இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள் மற்றும் பாக்கு மட்டையில் தட்டு தயாரிக்க தேவையான உபகரணங்கள் குறித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தொழிற்சாலைகளுக்கு நேரில் விசிட் அடித்துள்ளார் .

மேலும் படிக்க:  சுந்தர பாண்டியன் கட்டிய 700 ஆண்டுகள் பழமையான ஆலங்குடி நாமபுரீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்..

ரூ. 4.5 லட்சம் முதலீடு:

போதுமான அனுபவங்களும், பயிற்சியும் அங்கு கிடைக்கவே உடனடியாக அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெற்று 5 வகையான அளவில் பாக்குமட்டைத் தட்டுகள் மற்றும் தொன்னைகள் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கியுள்ளார்.

அரசு வழங்கிய கடன் உதவியோடு குடும்பத்தினரின் நிதி உதவி மற்றும் தனது சேமிப்புகள் என சிறு கட்டிடம் உட்பட அனைத்துப் பணிகளுக்குமாக 4,50,000 ரூபாயை முதலீடாக வைத்து தொழிலை தொடங்கி உள்ளார்.

பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு

பாக்கு தட்டுகளுக்கு டிமாண்ட்:

தொழில் தொடங்கிய போது, தொடக்கத்தில் தட்டுகளை விற்பதும் மார்க்கெட்டிங் செய்வதும் தான் மிகக் கடினமாக இருக்கப் போவதாக நினைத்ததாகவும், ஆனால் தான் நினைத்ததை விட இத்தயாரிப்புகளுக்கான தேவை மார்க்கெட்டில் அதிகமாக இருப்பதாவும் தெரிவிக்கிறார் சிவக்குமார்.

மேலும் படிக்க:  புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வம்.. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலின் சிறப்புகள்..

நல்ல லாபம் உறுதி:

மேற்கொண்டு நம்மிடம் பேசிய சிவக்குமார், தற்போது கிடைக்கும் வருமானம் ஏறத்தாழ மாதமொன்றிற்கு 20,000 ரூபாய் வரைதான் இருப்பதாகவும், அதற்குக் காரணம் தன்னிடம் தற்போது இருக்கும் இயந்திரங்களால் உற்பத்தி திறனை அதிகமாகத் தர முடியாதது தான் என்கிறார். இதுகுறித்து, சில நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் விரைவில் தற்போதைய இயந்திரத்தில் இருக்கும் அழுத்தும் பகுதியை மாற்றி அமைத்து உற்பத்தி திறனை அதிகரித்தால் மாதம் 50,000 வரையிலும் லாபமாக பெற்று விட முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தொழிலில் சவால்கள் என்ன?

அனைத்தையும் விட அதிகளவில் லாபத்தை குறைக்கும் காரணியாக இருப்பது பாக்கு மட்டைகள் தான் என்கிறார் சிவக்குமார். கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தான் பாக்கு மட்டைகளை வாங்க வேண்டி இருக்கிறது. கர்நாடகத்தில் ஒரு பாக்கு மட்டையின் விலை 2.60 காசுகளாக இருப்பதாகவும் அவற்றை வாங்கி வரியோடு சேர்த்து ஊருக்கு கொண்டு வந்து சேர்க்கும் போக்குவரத்து செலவோடு ஏறத்தாழ ஒரு பாக்கு மட்டையின் விலை ரூ. 6 ஆக உயர்வதாகவும் தெரிவிக்கிறார். தன்னைப் போன்ற சிறு குறு தொழில் செய்வோரைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இது போன்ற மூலப் பொருட்களை மானிய விலையில் வழங்கினால் அது தன்னைப் போன்றோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார் வளரும் தொழில் பிரமுகர் சிவக்குமார்.

சிவக்குமாரின் இந்த பாக்கு மட்டை தொழிற்சாலை, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இருந்து 5 கிமீ-ல் கொத்தமங்கலம் சாலையில் சேந்தன்குடியில் அமைந்திருக்கிறது.

சிவக்குமாரிடம் வெவ்வேறு அளவிளான பாக்கு மட்டை தட்டுகள் மற்றும் தொன்னைகள் ரூ. 1.50 முதல் ரூ. 6 வரை கிடைக்கின்றன.

தொடர்புக்கு: சிவக்குமார், ஜோதி என்டர்பிரைசஸ், சேந்தன்குடி.

8838198184

Published by:Arun
First published:

Tags: Business, Business Idea, Local News, Pudukkottai