Home /pudukkottai /

கீரமங்கலம் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கை இது தான்.. பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

கீரமங்கலம் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கை இது தான்.. பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கீரமங்கலம்

Pudukottai Keeramangalam | கீரமங்கலம் வடக்குப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய பேருராட்சி நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது. அச்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ள நிலையில் அதனை சீரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் பகுதியில் 25 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சாலை குறித்து பல முறை  அதிகாரிகளிடம்  முறையிட்டும் பலனில்லை என வருத்தம் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள். உடனடியாக சாலையை சீர்செய்து புதுப்பித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீரமங்கலம் வடக்குப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய பேருராட்சி நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது. அதனையடுத்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தச் சாலையை புதுப்பித்து உள்ளனர்.

பேரூராட்சி சார்பில், சாலை  புதுப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பழுதடைந்து வாகன போக்குவரத்துக்கு கடினமாக மாறியுள்ள இந்த சாலையானது இன்னும் புதுப்பிக்கப்படாமல் பல இடங்களில் தார்ச்சாலை என்ற அடையாளமே தெரியாத அளவிற்கு மண் சாலையைப் போல் காட்சி அளிக்கிறது.

இதையும் படிங்க:  பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் புதுக்கோட்டை அறம்வளர்த்த நாயகி திருக்கோவில்- சிறப்புகள் தெரியுமா?

இந்த சாலையை புதுப்பித்துத் தரக் கோரி பேரூராட்சி நிர்வாகம், வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், மாங்காடு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கீரமங்கலம் வந்து செல்லவும் இந்த சாலையைத் தான் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கீரமங்கலம் - கொத்தமங்கலம் இணைப்பு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்ட நிலையில் அதுவும் முழுமையாக குண்டும் குழியுமாக மாறி உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் இந்த சாலைகளின் வழியாக பயணித்து வரும் சூழலில் குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலைகளால் அவ்வப்போது சிலர் காயமடைந்து எலும்பு முறிவு கூட ஏற்பட்டு உள்ளது.
இந்த சாலைகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukottai

அடுத்த செய்தி