Home /pudukkottai /

கீரமங்கலம் நரிக்குறவர் காலனி மாணவர்களை சொந்த காரில் பள்ளியில் இறக்கிவிடும் வட்டார கல்வி அலுவலர்..

கீரமங்கலம் நரிக்குறவர் காலனி மாணவர்களை சொந்த காரில் பள்ளியில் இறக்கிவிடும் வட்டார கல்வி அலுவலர்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்..

Pudukkottai Narikuravar Colony Students | புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி அறிவொளி நகரில் இருந்து பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் நரிக்குறவ மாணவர்களை வீடு வீடாகச் சென்று உற்சாகப்படுத்தி பள்ளிக்கு தனது காரிலேயே அழைத்துச் செல்கிறார் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
பள்ளிக்கு செல்லாத நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த மாணவர்களை வீடு வீடாக சென்று அவர்களை தனது சொந்த காரில் அழைத்துச் சென்று பள்ளியில் விடும் பணியை செய்து வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் ஒருவர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான நரிக்குறவ இனமக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் இருந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் தினசரி பள்ளிக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்து விடுவதாகவும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை எனவும் ஆசிரியர்கள் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

மாணவர்களை சொந்தக் காரில்..


இதன் அடிப்படையில் வாரத்தில் ஒருநாள் காலை நேரத்தில் கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதிக்கு வரும் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் மாணவ மாணவிகளை வீடு வீடாக சென்று உற்சாகப்படுத்தி பள்ளிக்கு கிளம்புமாறு மாணவர்களையும், பெற்றோரையும் உற்சாகப்படுத்துகிறார். உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தனது செலவில் சில பரிசுப் பொருட்களையும் கொடுத்து தனது சொந்தக் காரிலேயே ஏற்றிச் சென்று அவரவர் படிக்கும் பள்ளிகளில் விடுகிறார்.

இதையும் படிங்க:  இன்னும் வரி செலுத்தவில்லையா...? - புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கீரமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் அப்பள்ளியின் ஆசிரியர்களிடமும் மாணவர்களை தினசரி பள்ளிக்கு வருவதைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வட்டார கல்வி அலுவலர்.


அத்தோடு மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தி தினசரி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை கொண்டு சென்று விட்ட வட்டாரக் கல்வி அலுவலர், அங்கு உள்ள நரிக்குறவ மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்களையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதையும் படிங்க:  தென்னிந்தியாவின் உயரமான சிவன் சிலையை கொண்ட கீரமங்கலம் மெய்நின்ற நாதர் ஆலயத்தின் சிறப்புகள்..

பள்ளிக்கு வரும் போது பாதுகாப்பாக வர வேண்டும் எனவும், எண்ணெய் தேய்த்து தலை வாரி பள்ளிக்கு 'நீட்டாக' வந்தால் வருங்காலத்தில் 'நீட்'டையும் சாதிக்கலாம் போன்ற உற்சாக அட்வைஸ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நேரத்திற்கு பணிக்குச் சென்று வீட்டிற்கு ஓடிவிடும் அதிகாரிகள் மத்தியில் மாணவர்களின் கல்விக்காக சொந்த செலவில் நேரம் ஒதுக்கி திருவரங்குளத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு 20 கிமீ-ல் உள்ள கீரமங்கலம் ஓடி வந்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வட்டாரக் கல்வி அலுவலர் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம் என்கின்றனர் அப்பகுதி பெற்றோர்கள்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி