புதுக்கோட்டை மாவட்டத்தில் மல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ், தனது 8 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே தொடர்ந்து பயிரிட்டு வருகிறார். அதையும் இயற்கை முறையில் மட்டுமே செய்து அசத்தி வரும் புதுக்கோட்டை விவசாயி சுரேஷ் ஏன் இப்படி இயற்கை விவசாய முறைக்கு மாறினார் என்பதை அறிய அவரிடம் கேட்டோம்.
தன்னுடைய விவசாய பணிகளுக்கு இடையில் நம்மிடம் பேசினார் “கருப்பு கவுனி மாப்பிள்ளை சம்பா, வாசனை சீரக சம்பா, கிச்சடி சம்பா என 10 க்கும் மேற்பட்ட வகையான பாரம்பரிய நெல் ரகங்களை என்னுடைய 8 ஏக்கர் நிலத்தில் முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன்.
இந்த பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்ய காரணம் என்னவென்றால் எனது தந்தைக்கு முதலில் சர்க்கரை இருந்தது அதை கட்டுப்படுத்த அவருக்கு சிறிதளவு பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனியை விதைத்து அறுவடை செய்து அவருக்கு கொடுத்தோம். பின் தந்தையின் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே இது எங்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களின் ஆரோக்கியத்திற்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அதேபோல் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை முறை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டும்.
நமது பாரம்பரிய மருத்துவ குணங்கள் மிக்க நெல் ரகங்களை பயிர் செய்வதோடு அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும். நான் தற்போது ஈடுபட்டுள்ள இந்த இயற்கை முறை விவசாயத்திற்கு எந்தவித ரசாயன பொருளோ செயற்கை மருந்துகளோ பயிர்களுக்கு தெளிப்பதில்லை இயற்கையில் உள்ள இலை சத்துக்கள் பஞ்சகவ்யா மீன் அமிலம் போன்ற இயற்கை உரங்களே இட்டு விவசாயம் செய்து வருகிறேன்” மேலும் இயற்கை விவசாயி என்ற அங்கீகாரம் அரசிடம் இருந்து எனக்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இயற்கை விவசாயி சுரேஷ்.பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்துமே தவிர நோய்கள் வரவைக்காது என்பதை உலகிற்கு உரக்க சொல்கிறார் இயற்கை விவசாயி சுரேஷ். புற்றுநோய்க்கு, புது மாப்பிள்ளைக்கு, குழந்தைக்கு, கர்ப்பிணி பெண்ணுக்கு, மூட்டு வலிக்கு, சக்திக்கு, தோலுக்கு, குடலுக்கு, இதயத்திற்க்கு என உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்பட வைக்கும் மகத்துவம் நம் பாரம்பரிய நெல் ரகத்தில் மட்டுமே உள்ளது என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Pudukkottai, Sugar