முகப்பு /புதுக்கோட்டை /

கருக்காகுறிச்சி ஶ்ரீசெல்லியம்மன் ஸ்ரீஅகோர வீரபத்திரர் சாமி கோவிலில் முளைப்பாரி எடுப்பு விழா! 

கருக்காகுறிச்சி ஶ்ரீசெல்லியம்மன் ஸ்ரீஅகோர வீரபத்திரர் சாமி கோவிலில் முளைப்பாரி எடுப்பு விழா! 

X
முளைப்பாரி

முளைப்பாரி எடுப்பு விழா

Karukakurichchi Temple | ஆலங்குடி அருகே கருக்காகுறிச்சி ஶ்ரீசெல்லியம்மன் ஸ்ரீஅகோர வீரபத்திரர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெரு வீரக்குடி நாட்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்றதும், பழமை வாய்ந்ததுமான, ஸ்ரீசெல்லியம்மன் ஸ்ரீஅகோர வீரபத்திரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன் படி, இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, கருக்காக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரு வடதெரு, கரு தெற்கு தெரு, பட்டத்திக்காடு, காளகொள்ளை, வாணக்கன்காடு பெரியாவிடுதி, கண்ணியான் கொல்லை, வாண்டான் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்று கும்மியடித்து முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

முளைப்பாரி எடுத்த பக்தர்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து அவர்கள், நொண்டி அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பாளி குளத்தை மூன்று முறை சுற்றி வந்து முளைப்பாரியை பாளி குளத்தில் விட்டனர். இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த விழாவுக்கு வருகை தந்து அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வயிறார சாப்பிட்டு சென்றனர்.

First published:

Tags: Local News, Pudukkottai