புதுக்கோட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சொக்கநாதர் மீனாட்சிக்கு சிறப்பு பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக திகழ்வதாகவும், அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் இதை தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சிவனுக்கு சங்காபிஷேகம் செய்விக்கப்படுகிறது. சங்காபிஷேகம் பார்த்தாலோ, சிவமூர்த்தத்திலிருந்து விழும் தீர்த்தத்தைப் பருகினாலோ உடல் சமன் நிலை பெறும். தோஷம் நீங்கும், பிணிகள் அண்டாது.
இந்த சங்காபிஷேகம் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையில் நடைபெறும் இந்த பூஜையை ”சோமவார பூஜை” என்பர். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று பொருள். சோமன் என்றால் பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்று அர்த்தம். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் சிவனின் மனம் மகிழ்ந்து, வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி.
இதையும் படிங்க : திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!
இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ள சொக்கநாதர் மீனாட்சிக்கு சிறப்பு பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வாழை இலை மீது தானியங்களைப் பரப்பி அதன் மீது சங்குகளை முறையாக வைத்து நீர் வார்த்து, மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகிப்பர். பின்னர் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. 108 சங்குகளை சிவன் வடிவத்தில் அமைக்கப்பட்டு பின்னர் அந்த சங்குகளில் உள்ள நீரினை வைத்து அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் மகா அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: சினேகா (புதுக்கோட்டை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukottai, Tamil News