ஹோம் /புதுக்கோட்டை /

புதுப்பித்து 4 வருஷம் ஆச்சு.. யாருக்காக காத்திருக்கு கறம்பக்குடி பேருந்து நிலையம்?

புதுப்பித்து 4 வருஷம் ஆச்சு.. யாருக்காக காத்திருக்கு கறம்பக்குடி பேருந்து நிலையம்?

கறம்பக்குடி

கறம்பக்குடி பேருந்து நிலையம், புதுக்கோட்டை மாவட்டம்

Karambakudi Bus Stand | புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பேரூராட்சியில் முக்கியமான பகுதியில் இருக்கக்கூடிய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாததால் பொது மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாத நிலையில் இருக்கும் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவில் தலைமையிடமாகவும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைமை இடமாகவும் இன்னும் பல முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் இடமாகவும் இருக்கும் கறம்பக்குடி பேரூராட்சியில் முக்கியமான பகுதியில் இருக்கக்கூடிய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாததால் பொது மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திறக்கப்படாத பேருந்து நிலையத்தை சமூக விரோதிகளின் கூடாரமாக்கி குடிகாரர்கள் அட்டகாசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:  முக்காலி மூலம் திருடனை கண்டறியும் கிராம மக்கள்.. புதுக்கோட்டையில் விநோதம்..

பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்படாத சூழலால் பேருந்து நிலையத்திற்கு வெளியே அனைத்து பேருந்துகளும் வரிசையில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது மேலும் பேருந்து நிலையம் திறக்கப்படாததால் சாலையிலேயே நின்று பேருந்துக்காக காத்து இருக்க வேண்டிய வாழ் பொதுமக்கள் பெண்கள் மற்றும் நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் படிக்க:  புதுக்கோட்டையில் ஒரு புதுமையான நர்சரி.. அப்படி என்ன ஸ்பெஷல்?

கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் இது தொடர்பாக நாம் கேட்ட போது விரைவில் இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், சில மாதங்களுக்குள்ளாகவே பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும் எனவும் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இருந்தாலும் அப்பகுதி பொதுமக்கள் இதே போலத்தான் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர் எனவும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனடியாக தலையிட்டு பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் கறம்பக்குடி பேரூராட்சிக்கு மட்டுமன்றி கறம்பக்குடி தாலுகாவிற்கு பெரிய பயனுள்ள செயலாக அமையும் என தெரிவிக்கின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Pudukottai