கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் செயல் வெற்றியடையும் புதிய முதலீடுகளை செய்வீர்கள். உங்களுக்கு சகோதர வழியில் லாபம் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வழக்கு மன்றம் வரை செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஜனவரிக்குப் பிறகு தீர்வு உண்டாகும். குடும்பத்தில் ஒருவித பதட்டமும், ஏற்பட்டாலும் பாதிப்பு ஏதுமில்லை. தந்தைக்கும் தாய்க்கும் உடல்நலத்தில் சற்று செலவு செய்ய வாய்ப்புண்டு. மனைவி சொல்லின் மாதவம் என்று இருந்தால் பிரச்சனை ஏதுமில்லை. துணைவரின் என்ன ஓட்டத்தில் சில பிறழ்ச்சிகள் ஏற்படும்.
மேலும் படிக்க : ஸ்கூட்டியில் நெடுந்தூரம் பயணம் செய்து சாதனை படைத்த விருதுநகர் இளைஞர்!
பணவரவு உண்டு. துணைவர் சொத்தில் வாக்குவாதம் வேண்டாம். சிலருக்கு இடம் விட்டு இடம் பெயர வாய்ப்பு உண்டு. கல்வியை பொறுத்தவரை மிகவும் சிரமப்பட்டு உயர்கல்வியை முடிப்பீர்கள் ஆடு,மாடு வளர்ப்பில் கவனம் தேவை ஈடுபடுபவர்கள் வாக்கு கொடுத்து வீணாக பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்.
ஜூன் 7, 8 ,9 இல் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு கடன் வாங்க நேரிடும். ஜூன் 14, 15 ல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு மேலும் நன்மைகளை அடையுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Life18, Rasi Palan